/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உக்கம்பெரும்பாக்கத்தில் வரும் 17ல் கோபூஜை
/
உக்கம்பெரும்பாக்கத்தில் வரும் 17ல் கோபூஜை
ADDED : ஜன 13, 2024 09:22 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், வரும் 17ல், காணும் பொங்கல் தினத்தன்று, கோபூஜை பெருவிழாவும், சிவபெருமானின் அம்சமான அரச மரத்திற்கும், அம்பிகையின் அம்சமான வேப்ப மரத்திற்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
விழாவையொட்டி அன்று, காலை 6:30 மணிக்கு விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், நவக்கிரஹங்கள், சிவசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும், ருத்ராட்ச லிங்கபேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் கோபூஜை நடக்கும் இடத்திற்கு எழுந்து அருள்கின்றனர்.
காலை 10:00 மணிக்கு கோபூஜையும், தொடர்ந்து சென்னை இசை, ஓவியம், இசைக் குழுவினரின் ஆன்மிக இன்னிசை கச்சேரி நடக்கிறது.
மதியம் 1:30 மணிக்கு விருட்ச பூஜை, ஹோமம், அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவமும், மஹா தீபாராதனையும் நடைபெற உள்ளது.

