/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மிலிட்டரி சாலை ஓர பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
/
மிலிட்டரி சாலை ஓர பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
மிலிட்டரி சாலை ஓர பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
மிலிட்டரி சாலை ஓர பள்ளம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2024 09:18 PM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது.
கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும் புறவழிசாலையான இது, அகலம் குறைவாக உள்ளதால், தற்போது, விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தேனம்பாக்கம், விஷ்ணு நகர் அருகில், விவசாய நிலம் உள்ள பகுதியில் 5 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் உள்ளது.
மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், விவசாய நிலம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், விவசாய நிலம் பள்ளம் உள்ள பகுதியில் சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.