ADDED : ஜன 20, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும், ஜன., 26 குடியரசு தினத்தில், காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள், கொசு ஒழிப்பு, துாய்மை பாரதம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், கிராம ஊராட்சி நிர்வாகங்கள், வரவு - செலவு கணக்குகளை ஊராட்சியின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் பார்வையிட பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

