ADDED : ஜன 20, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், பாலர் சபை, மகிளா சபை ஆகிய சபைகளை துவக்க வேண்டும் என, மாநில ஊரக வளர்ச்சி துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில், தேவரியம்பாக்கம் கிராமத்தில், பாலர் சபை துவக்கி, தேர்தல் முறையில் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு உள்ளது.
இது, வெற்றிகரமாக நிறைவு பெற்றதால், மகிளா சபை துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, ஜன. 24ல், மகிளா சபை கூட உள்ளது. இதில், கொண்டு வரப்படும் தீர்மானங்களை குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன என, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தெரிவித்தார்.

