/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சி கட்டடம் புதிதாக கட்ட இடித்து அகற்றம்
/
காஞ்சி மாநகராட்சி கட்டடம் புதிதாக கட்ட இடித்து அகற்றம்
காஞ்சி மாநகராட்சி கட்டடம் புதிதாக கட்ட இடித்து அகற்றம்
காஞ்சி மாநகராட்சி கட்டடம் புதிதாக கட்ட இடித்து அகற்றம்
ADDED : ஜன 23, 2024 10:14 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 2021ல் தரம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய மாநகராட்சி கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் இயங்கி வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான 'டெண்டர்' பணிகள் முடிந்தன.
இந்நிலையில், நுாறாண்டுகள் கடந்த பழமையான கட்டடத்தை இடிக்கும் பணிகள், சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
பழமையான கட்டடத்தில் உள்ள மரக் கதவு, ஜன்னல்கள், துாண்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணி இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, புதிய மாநகராட்சி அலுவலக கட்டடம், சகல வசதியுடன் நடைபெற இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.