/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மாற்றம் பரிசீலனையில் உள்ளது'
/
'காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மாற்றம் பரிசீலனையில் உள்ளது'
'காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மாற்றம் பரிசீலனையில் உள்ளது'
'காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் மாற்றம் பரிசீலனையில் உள்ளது'
ADDED : ஜன 18, 2024 11:02 PM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை, காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் தாக்கல் செய்த பொது நல மனு:
காஞ்சிபுரம் மாவட்டம், 2019ல் இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்பு நீதிமன்றங்கள், தற்போது வரை செங்கல்பட்டில் உள்ளன.
ஆனால், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் காஞ்சிபுரத்துக்கு, இதுவரை மாற்றப்படவில்லை.
இதுதொடர்பாக, கடந்தாண்டு அளித்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்காடிகள், தங்கள் வழக்குகளுக்காக செங்கல்பட்டு செல்ல வேண்டியுள்ளது.
'எனவே, செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களை, காஞ்சிபுரத்துக்கு மாற்றக் கோரி, 2023 ஆக.,28ல் அரசுக்கு மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது தொடர்பாக, உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பரிசீலித்து வருவதாக தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

