/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.23 லட்சம்
/
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.23 லட்சம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.23 லட்சம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.23 லட்சம்
ADDED : ஜன 18, 2024 09:33 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்தி கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது.
அதன்படி, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், பிற கோவில் செயல் அலுவலர்கள், சிவ காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் பிரித்திகா உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று கோவிலில் உள்ள எட்டு உண்டியல்கள் திறக்கப்பட்டன.
இதில், காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி நாட்டு நலப் பணி திட்ட மாணவ- - மாணவியர், தன்னார்வலரகள், பக்தர்கள் மாணவியர். சமூக ஆர்வலர்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 23 லட்சத்து. 60,938 ரூபாய் ரொக்கமும், 36 கிராம் தங்கம், 708 கிராம் வெள்ளி என, கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.