/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் எஸ்.பி., பொறுப்பேற்பு
/
காஞ்சிபுரம் எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஜன 13, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுதாகர், சென்னை காவல் துணை ஆணையராக இடமாறுதலில் சென்றார்.
அவருக்கு பதிலாக, கோவை தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும். அதனுடன் லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்படும்' என்றார்.

