/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்
/
பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்
பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்
பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்
ADDED : ஜன 13, 2024 11:02 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பழையசீவரம் கிராமத்தில், நாளை மறுநாள், வரதர் பார்வேட்டை உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு, நாளை இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து, கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு செல்ல உள்ளார்.
பழையசீவரம் கிராமத்தில் இரவு தங்குகிறார். வரும் 16ம் தேதி மாட்டு பொங்கல் தினத்தன்று திருமஞ்சனத்திற்கு பின், மலை மீது இருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
இதையடுத்து, மலையில் இருந்து இறங்கி வந்து பார்வேட்டை உற்சவம் நடைபெற உள்ளது. பழையசீவரம் மலை மீது இருக்கும் கோவிலில் இருந்து, புறப்பட்டு திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்ல உள்ளார்.