/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரன் கொலை வழக்கு காஞ்சி நீதிமன்றத்திக்கு மாற்றம்
/
குமரன் கொலை வழக்கு காஞ்சி நீதிமன்றத்திக்கு மாற்றம்
குமரன் கொலை வழக்கு காஞ்சி நீதிமன்றத்திக்கு மாற்றம்
குமரன் கொலை வழக்கு காஞ்சி நீதிமன்றத்திக்கு மாற்றம்
ADDED : ஜன 09, 2024 10:18 PM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.குமரன். இவர், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப், ரியல் எஸ்டேட், கட்டபஞ்சாயித்து போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2011ல், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், 2012 அக்., 1ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே காரில் சென்ற போது, மர்ம நபர்கள் காரை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய, போந்துார் செந்தில் ராஜன், மண்ணுார் குட்டி என்ற வெங்கடேசன், குன்றத்துார் வைரம் என்ற வைரமுத்து, மதுரையைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் அப்பள ராஜா, மாட்டு மூளை கணேசன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வெளிவந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்ததால், 11 ஆண்டுகளாக பி.பி.ஜி. குமரன் கொலை வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்., பரந்தாமன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கினை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து வந்தார்.
அதன் படி, முக்கிய குற்றவாளியான போந்துார் செந்தில்ராஜன், ரவுடி வைரம், மதுரை அப்பள ராஜா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் என 17 பேர், நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார், இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட அமர்ந்து நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

