/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அயோத்தியில் கும்பாபிஷேகம் காஞ்சியில் கூட்டு பிரார்த்தனை
/
அயோத்தியில் கும்பாபிஷேகம் காஞ்சியில் கூட்டு பிரார்த்தனை
அயோத்தியில் கும்பாபிஷேகம் காஞ்சியில் கூட்டு பிரார்த்தனை
அயோத்தியில் கும்பாபிஷேகம் காஞ்சியில் கூட்டு பிரார்த்தனை
ADDED : ஜன 23, 2024 06:12 AM

காஞ்சிபுரம், ;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, சின்ன காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெருவில் உள்ள கீர்த்தனாவளி மண்டபத்தில், நேற்று காலை, சுவாமி மாதுாரி சகி சமேத ப்ரேமிக வரதனுக்கு விசேஷ அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று, காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தொடர்ந்து, அகண்ட நாம கீர்த்தனம் நடந்தது. இதில், மாலை 5:00 மணிக்கு உலக மக்களின் நன்மைக்காக உவே ஸ்ரீநிவாசன் ஜி, கூட்டு பிராத்தனை நடத்தினார்.
18 அடி ஆஞ்சநேயர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில் உள்ள 18 அடி உயர பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார்
அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவில், தாந்தோண்றி அம்மன் கோவில், அனுமன் கோவில்களில், காலை 10.00 மணி முதல், சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமரின் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜை, ஆராதனை தொடர்ந்து பஜனை மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது.
அதேபோல, மணவாள மாமுனிகள் கைங்கர்ய ட்ரஸ்ட் சார்பாக, ஸ்ரீபெரும்புதுார் காந்திரோட்டில் உள்ள எம்பார் ஜீயர் மடத்தில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

