/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 14, 2025 11:48 PM

ஏனாத்துார்:ஏனாத்துாரில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில், சாலையோரத்தில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, கவுரியம்மன்பேட்டை மருதம், வையாவூர், சிட்டியம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையோரம் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சென்ற மழைநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாய்யோரம், சேதமடைந்த சாலையை மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.