/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சகதியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
/
சகதியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 26, 2025 04:02 AM

பினாயூர்:திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் இருந்து, பினாயூர் பிரிந்து செல்லும் சாலை சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்று பாலம் அருகே, பினாயூர் மற்றும் பழவேரி பிரிந்து செல்லும் சாலை உள்ளது.
பினாயூர், பழவேரி, சீட்டணஞ்சேரி, ஆத்தங்கரை, அரும்புலியூர், சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இச்சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர் லாரிகளால் இச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.
குறிப்பாக திருமுக் கூடல் பாலாற்று பாலம் துவங்கி ஒரு கி.மீ., துாரத்திற்கான சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
மழை நேரங்களில் சாலை சகதியாகி விடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கல் ஏற்பட்டு விபத்திற்குள்ளாகின்றனர்.
பருவ மழைக்காலம் விரைவாக துவங்க உள்ளதால், பழுதான இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.