/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் இடையூறு செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் இடையூறு செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 18, 2024 09:44 PM

நத்தப்பேட்டை:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டையில் இருந்து, நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர் வழியாக காஞ்சிபுரம் மற்றும் ராஜகுளம் செல்லும் புறவழி சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், நத்தப்பேட்டை மீனாட்சி நகர் அருகில் உள்ள குளக்கரையோரம், சாலை தடுப்பு உள்ள பகுதியில் செடி, கொடிகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளன.
இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, அங்குள்ள செடிகளின் கிளைகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகின்றன.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் உள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

