/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பு வாகனங்களால் பாதசாரிகள் அவதி
/
ஆக்கிரமிப்பு வாகனங்களால் பாதசாரிகள் அவதி
ADDED : ஜன 18, 2024 09:46 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள சாலைகளில், மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள காமராஜர் சாலை முக்கியமானதாகும். பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, உத்திரமேரூர் செல்ல பிரதான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றன.
அதேபோல, வந்தவாசி, உத்திரமேரூரில் இருந்து வரும் வாகனங்களும் மூங்கில் மண்டபம் வழியாகவே பயணிக்கின்றன.
இதுபோன்ற நிலையில், காமராஜர் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளை, இருசக்கர வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதால், பாதசாரிகள் செல்லக்கூட இடமில்லாத நிலை உருவாகியுள்ளது.
இங்குள்ள வங்கி, கடைகளில் பணியாற்றுவோர் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி உள்ளதால், பொதுமக்கள் பலரும் சாலையிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டியுள்ளது.
பேருந்து, வேன் போன்ற வாகனங்கள் பேருந்து நிலையம் நோக்கி செல்லும்போது, பாதசாரிகள் நடக்கக்கூட இடமில்லாத நிலை ஏற்படுகிறது.
இதனால், விபத்து ஏற்படுமோ என, பாதசாரிகள் அச்சமடைகின்றனர். நடைபாதையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

