/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லப்பாக்கம் ஏரி கால்வாயை துார்வாரி பராமரிக்க மனு
/
வல்லப்பாக்கம் ஏரி கால்வாயை துார்வாரி பராமரிக்க மனு
வல்லப்பாக்கம் ஏரி கால்வாயை துார்வாரி பராமரிக்க மனு
வல்லப்பாக்கம் ஏரி கால்வாயை துார்வாரி பராமரிக்க மனு
ADDED : ஜூன் 24, 2025 12:44 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள வல்லப்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிக்கக்கோரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
அதில், வாலாஜாபாத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, வாலாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு தெருக்கள் வழியாக வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் உள்ளது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் இக்கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் வல்லப்பாக்கம் ஏரி நிரம்ப வழி வகுக்கிறது.
இந்நிலையில், பாலாற்றில் இருந்து வல்லப்பாக்கம் செல்லும் வரத்து கால்வாய் பல்வேறு இடங்களில் துார்த்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த நீர் வரத்து கால்வாய் வாலாஜாபாத் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறியதோடு, அடைப்புகள் அதிகரித்து துார்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி போன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில், இக்கால்வாயில் நிரம்பும் கழிவுநீர் குடியிருப்புகளில் புகுந்து நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது.
எனவே, வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.