/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்
/
சாலவாக்கம் பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்
சாலவாக்கம் பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்
சாலவாக்கம் பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரம்
ADDED : மார் 28, 2025 01:20 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் பகுதியில், பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இப்பேருந்து நிலையம், 14 ஆண்டுக்கு முன், கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு இல்லாததால், மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில், பயணியர் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
பின், பேருந்து நிலைய கூரையில் வர்ணம் பொலிவிழந்தும் காணப்பட்டது. இதை சீரமைக்க பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 5.29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பேருந்து நிலையத்தில் புதிதாக மின் இணைப்பு ஏற்படுத்தி, மின் விளக்கு அமைத்தும், கூரைக்கு வர்ணம் பூசும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.