/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 23, 2024 09:40 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஓம் சாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில், கல்லுாரியைச் சேர்ந்த, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சீட்பெல்ட் அணிவதன் அவசியம், அதிவேகத்தால் ஏற்படும் விளைவுகள், ஹெல்மெட் கட்டாயம் அணிதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது, விதிமுறைகள் பின்பற்றி விபத்தை தடுத்தல் குறித்து, மாணவர்கள் பொதுக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில், ஓம் சாந்தி கல்லுாரியின் செயலர் சந்தோஷ், கல்லுாரி முதல்வர் மேகலை, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்., பரந்தாமன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

