/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 23, 2024 09:42 PM

திருப்பருத்திக்குன்றம்:காஞ்சிபுரம் எஸ்.பி.,பங்களா எதிரில் இருந்து, கீழம்பி புறவழிச் சாலையை இணைக்கும் திருப்பருத்திக்குன்றம் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருப்பருத்திக்குன்றம், கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், பெரும்பாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், தாய்படவேட்டம்மன் கோவில் அருகில், மழைநீர் கால்வாய் ஓரம், மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.