/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியப்பேட்டை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
/
களியப்பேட்டை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:களியப்பேட்டையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, கோலப்போட்டி நடைபெற்றது. இதில் அப்பகுதி பெண்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பொங்கல் பானை, உழவு மாடு போன்றவை வரைந்து வண்ண கோலமிட்டனர்.
அதை தொடர்ந்து, தமிழர் பாரம்பரிய முறையில், பானையில் பொங்கலிட்டு, கரும்புகள் படைத்து, 'பொங்கலோ பொங்கல்' என கோஷமிட்டனர்.
விழாவில், சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அப்பகுதி ஊராட்சி தலைவர் பிருந்தாவதி பரிசுகள் வழங்கினார்.

