/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அச்சத்தில் பள்ளி மாணவ - மாணவியர்
/
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அச்சத்தில் பள்ளி மாணவ - மாணவியர்
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அச்சத்தில் பள்ளி மாணவ - மாணவியர்
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அச்சத்தில் பள்ளி மாணவ - மாணவியர்
ADDED : ஜூன் 24, 2025 12:44 AM

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில் உள்ள துவக்கப் பள்ளி நுழைவாயில் அருகில், மின்கம்பியில் உரசும் சாலையோர மரக்கிளையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில், வீர ஆஞ்சநேயர் கோவில், பட்டு ஜவுளி கடை, துவக்கப் பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான குறைந்த மற்றும் உயர் மின் அழுத்த மின்தட பாதை என, இரு மின்தட பாதை செல்கிறது.
இந்நிலையில், இச்சாலையோரம் உள்ள மூன்று காட்டுவாகை மரங்களின் கிளைகள், இரு மின்தட பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளுக்கு மேல் பகுதியிலும், மின்கம்பியை உரசும் வகையில் வளர்ந்துள்ளன.
இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசும்போது தீப்பொறி பறப்பதாகவும், இதனால், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு செல்லும் சாலையோரம் உள்ள துவக்கப்பள்ளி நுழைவாயில் பகுதியில் உள்ள மரக்கிளைகள் உயர் மின் அழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்த மின்கம்பிகளின் மீது முறிந்து விழுந்தால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால், மழை காலத்திலும், காற்றடிக்கும்போது பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, யதோக்தகாரி கிழக்கு மாட வீதியில், மின்விபத்தை ஏற்படுத்தும் வகையில், வளர்ந்துள்ள மூன்று காட்டுவாகை மரங்களின் கிளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.