/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்மாநில டேபிள் டென்னிஸ் 70 பல்கலை அணிகள் பங்கேற்பு
/
தென்மாநில டேபிள் டென்னிஸ் 70 பல்கலை அணிகள் பங்கேற்பு
தென்மாநில டேபிள் டென்னிஸ் 70 பல்கலை அணிகள் பங்கேற்பு
தென்மாநில டேபிள் டென்னிஸ் 70 பல்கலை அணிகள் பங்கேற்பு
ADDED : பிப் 01, 2024 11:39 PM

சென்னை:தென்மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 70 பல்கலையில் இருந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், தென்மாநில அளவில் பல்கலைகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று துவங்கியது.
இப்போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடக்கிறது.
இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 70 பல்கலைகளில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்னர்.
நேற்று துவங்கிய முதல் நாள் போட்டியை, அம்பேத்கர் பல்கலையின் துணைவேந்தர் கேனல் என்.எஸ்.சந்தோஷ் குமார், விளையாட்டு பல்கலையின் துணைவேந்தர் சுந்தர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில், நாளை வரை நடக்கின்றன.
இதில், வெற்றி பெற்றும் முதல் நான்கு அணிகள் அடுத்த மாதம் டில்லியில் நடக்கும் அகில இந்திய போட்டியில் பங்கேற்கும் என, போட்டியின் ஒருங்கிணைபாளரும், அம்பேத்கர் பல்கலையின் உடற்கல்வி இயக்குனருமான பரமசிவம் தெரிவித்தார்.

