/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாட்டுக்கோழி வளர்க்க பயனாளிகளுக்கு மானியம்
/
நாட்டுக்கோழி வளர்க்க பயனாளிகளுக்கு மானியம்
ADDED : ஜூன் 24, 2025 10:49 PM
காஞ்சிபுரம்:நாட்டுக்கோழி பண்ணை, 50 சதவீத மானியத்தில் அமைக்க, பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள, 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் , அதாவது 1,65,625 ரூபாய் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி வாயிலாகவோ அல்லது சொந்த செலவு வாயிலாக பயனாளி திரட்ட வேண்டும்.
பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
பயனாளிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு செய்து, கலெக்டர் ஒப்புதல் பெற்று, தகுதி உறுதி செய்யும் ஆவண நகல்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனரால் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.