/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டையில் தை கிருத்திகை விழா
/
வல்லக்கோட்டையில் தை கிருத்திகை விழா
ADDED : ஜன 20, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், வல்லக்கோட்டை முருகன்கோவிலில், தை கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை கிருத்திகை முன்னிட்டு, மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், உற்சவருக்கு ரத்தினாங்கியுடன் மயில் வாகன அலங்காரமும் செய்யப்பட்டது.
சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

