/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்
/
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்
ADDED : ஜன 23, 2024 09:50 PM
சென்னை:ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, பேசின்பாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரின் தனிப்பிரிவு போலீசார், பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே, சந்தேகப்படும்படியான நபர்களை சோதனையிட்டனர்.
அதில், ஓட்டேரி, சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்த சந்திரன், 64, என்பவரை சோதனை செய்த போது, அவரது பையில் 2 கிலோ ஹான்ஸ், 750 கிராம் குட்கா பொருட்கள் இருந்தன.
விசாரணையில் இவர், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றி, கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.
இதையடுத்து, போதை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார், ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் சந்திரனையும் கைது செய்தனர்.

