/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரியன்கேடில் தார் சாலை இல்லாததால் ரயில் கடவுப்பாதையில் விபத்து அபாயம்
/
கரியன்கேடில் தார் சாலை இல்லாததால் ரயில் கடவுப்பாதையில் விபத்து அபாயம்
கரியன்கேடில் தார் சாலை இல்லாததால் ரயில் கடவுப்பாதையில் விபத்து அபாயம்
கரியன்கேடில் தார் சாலை இல்லாததால் ரயில் கடவுப்பாதையில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 26, 2025 12:33 AM

காஞ்சிபுரம்:ரயில் கடவுப்பாதை குறுக்கே தார் சாலை போடாததால், கரியன்கேடில் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கரியன்கேட் ரயில் கடவுப்பாதை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி ஆகிய மார்கம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.
சமீபத்தில், அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடத்தில், புதிய தண்டவாளம் மாற்றும் பணியை ரயில்வே துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த பணிக்கு, கடவுப்பாதை நடுவே இருந்த தார் சாலை அகற்றப்பட்டது. அதன் பின், புதிய தார் சாலை போடவில்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
எனவே, கரியன்கேட் ரயில் கடவுப்பாதையில் தார் சாலை போடுவதற்கு சம்பந்தப்பட்ட ரயில் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.