/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூடுதல் விலைக்கு மது விற்ற மூவர் கைது
/
கூடுதல் விலைக்கு மது விற்ற மூவர் கைது
ADDED : பிப் 01, 2024 11:14 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், மல்லியங்கரணை அருகே, அரசு மதுபான கடை இயங்குகிறது. இந்த மதுபான கடையில், மது பாட்டில்கள் பெற்று சிலர் அப்பகுதியை சுற்றி உள்ள மறைவான இடங்களில், காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நேற்று காலை, உத்திரமேரூர் போலீசார், அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நல்லுார் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் 42, உத்திரமேரூரைச் சேர்ந்த வரதன் 49, கோவிந்தராஜ், 50, ஆகியோர் அரசு மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த 286 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அந்த மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

