/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரமான உணவு தயாரித்தல் குறித்து சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
/
தரமான உணவு தயாரித்தல் குறித்து சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
தரமான உணவு தயாரித்தல் குறித்து சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
தரமான உணவு தயாரித்தல் குறித்து சமையலர், உதவியாளருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 15, 2025 01:35 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளருக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், கடந்த 1ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகிறது. இந்நிலையில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகலத்தில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
இதில், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஒன்றியங்களில் இருந்து, தலா ஐந்து சமையலர், ஐந்து உதவியாளர் வீதம் மொத்தம் 50 பேர் பங்கேற்றனர்.
உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ரக் ஷனா பங்கேற்று சுகாதாரமான முறையில் உணவு தயாரித்தல் முறை குறித்து விளக்கம் அளித்தார்.
சத்தான உணவுகள் மற்றும் உணவுகளின் தரத்தை மேம்படுத்துதல் குறித்து வாலாஜாபாத் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா எடுத்துரைத்தார்.
வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், சத்துணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதாரசரத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பன குறித்து விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சியில், உணவு தரமாக தயாரித்து, பாதுகாப்பாக வைத்து மாணவர்களுக்கு பரிமாறுதல், சமையல் செய்யும் போது தீ விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை போன்றவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.