/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மது கேட்டதால் விபரீதம் தீ வைத்த இருவர் கைது
/
மது கேட்டதால் விபரீதம் தீ வைத்த இருவர் கைது
ADDED : ஜன 18, 2024 09:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர், 55. மேளம் அடிக்கும் பணி செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மேளம் அடிக்க சென்றார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 37, முருகன், 51, ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மனோகர் இருவரிடமும் பணம் மற்றும் மது கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த இருவரும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை காலி பாட்டிலில் பிடித்து, மனோகர் மீது ஊற்றி தீ வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த மனோகரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சரவணன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

