/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பி.டி.ஓ. அலுவலக தரைதளம் சேதம்
/
வாலாஜாபாத் பி.டி.ஓ. அலுவலக தரைதளம் சேதம்
ADDED : ஜன 21, 2024 07:20 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேருந்து நிலையம் பின்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது. அதன் அருகே வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரவளர்ச்சி அலுவலக வளாகத்தை வாகனங்கள் நிறுத்துதல் போன்றவைக்கும் பயன்படுத்துகின்றனர்.
பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தின் தரைதளம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால், அப்பகுதிகளில் வாகனங்களை இயக்க சிரமமாகவும், இருசக்கர வாகனங்களை நிறுத்தம் செய்ய முடியாத நிலையும் உள்ளது.
எனவே, சேதமான தரைதளை பகுதியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

