sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் இழுபறி

/

உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் இழுபறி

உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் இழுபறி

உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் இழுபறி


UPDATED : அக் 13, 2025 06:13 AM

ADDED : அக் 12, 2025 10:39 PM

Google News

UPDATED : அக் 13, 2025 06:13 AM ADDED : அக் 12, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:-உத்திரமேரூர் பேரூராட்சியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய அவசியம், 20 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்த நிலையில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய முடியாமல் சிக்கல் நீடிக்கிறது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைவது இழுபறியாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில், 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், உத்திரமேரூர் பேருந்து நிலையம் வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், காஞ்சிபுரம், சென்னை, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில், 29 வழித்தட பேருந்துகள் இயங்குகின்றன. மேலும், சென்னையிலிருந்து வந்தவாசிக்கு உத்திரமேரூர் வழியாக பேருந்துகள் இயங்குகின்றன.

சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக திருவண்ணாமலைக்கும், அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இருப்பினும், போதிய இடவசதி இல்லாமல், நெருக்கடியான இடத்தில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. குறிப்பாக, ஆறு பேருந்துகள் மட்டுமே, நிலையத்தில் நிறுத்தும் அளவிற்கு நெருக்கடியான இடம் உள்ளது.

இதனால், சென்னை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடிவதில்லை.

கோரிக்கை இதனால் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நிலையத்திற்கு வெளியே பேருந்தை நிறுத்தி, பயனியரை இறங்கி விட்டு செல்கின்றனர். சில நேரங்களில், கிராமப்புற பயணியர் பேருந்துகளை தவறவிடும் சூழலும் உருவாகி உள்ளது.

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு வெளியே பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது. அதற்கான முயற்சிகளும் துவங்கின. ஆனால், இதுவரை புதிய பேருந்து நிலையம் அமையவில்லை.

தற்போதுள்ள உத்திரமேரூர் பேருந்து நிலையம், கடந்த 1987ம் ஆண்டில்10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகர வளர்ச்சி காரணமாக தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேலாக, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகமும், வருவாய் துறையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்போது வரை புதிய பேருந்து நிலையத்திற்கான இடம் கிடைக்கவில்லை.

உத்திரமேரூர்-வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள வேடப்பாளையம் கிராமப்பகுதியில் 5.50 ஏக்கர் பரப்பளவிலான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது.

சிக்கல் ஆனால், மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு மாற்று இடம் கால்நடை பராமரிப்பு துறைக்கு வழங்க வேண்டும். மாற்று இடம் கிடைக்காததால், தற்போது வரை இடம் தேர்வு செய்வதிலேயே சிக்கல் நீடிக்கிறது.

பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு, 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து பேரூராட்சி நிர்வாகம் அரசுக்கு அனுப்பி உள்ளது. ஆனால், இடம் தேர்வு முடிந்தால் தான், நிதி கிடைக்கும் சூழல் நிலவுகிறது.

புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் துவங்கி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை பேருந்து நிலையம் அமைக்க முடியாமல் உள்ளது.






      Dinamalar
      Follow us