/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கவுன்சிலர்களின் சொத்து வரி கட்டணங்களில் குளறுபடி மறு ஆய்வு செய்து சரியான வரி விதிக்கப்படுமா?
/
கவுன்சிலர்களின் சொத்து வரி கட்டணங்களில் குளறுபடி மறு ஆய்வு செய்து சரியான வரி விதிக்கப்படுமா?
கவுன்சிலர்களின் சொத்து வரி கட்டணங்களில் குளறுபடி மறு ஆய்வு செய்து சரியான வரி விதிக்கப்படுமா?
கவுன்சிலர்களின் சொத்து வரி கட்டணங்களில் குளறுபடி மறு ஆய்வு செய்து சரியான வரி விதிக்கப்படுமா?
ADDED : மார் 25, 2025 06:21 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பில், சரியான கட்டண விகிதங்கள் பின்பற்றப்படுவதில்லை என, தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன.
தங்கள் வார்டுகளில், வரி விதிக்கப்படாமல் பல கட்டடங்கள் உள்ளதாக, கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து, மாநகராட்சி கூட்டத்தில் அவ்வப்போது புகார் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால், கவுன்சிலர்களே தங்களது வீடுகளுக்கு சரியான கட்டண விகிதங்களை பின்பற்றுகிறார்களா என்பதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரின் வீட்டுக்கு சொத்து வரி, வெறும் 211 ரூபாய் மட்டுமே விதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, நகரின் பல்வேறு கவுன்சிலர்களின் வீடுகளுக்கு, சரியான சொத்து வரி விகிதங்கள் இன்றி, சொற்ப ரூபாய் மட்டுமே வரியாக விதிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கவுன்சிலர்கள், மாநகராட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் என, மக்கள் பிரதிநிதிகள் பலரும் தங்களது சொத்து வரி விகிதங்கள் மிக குறைவாகவே செலுத்துவது தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான சதுரடி கட்டடங்களுக்கு, அப்பகுதியின் தர நிர்ணயத்துக்கு ஏற்ப இந்த வரி விகிதங்கள் மாறுபடும். ஆனால், மிக குறைவாக, கவுன்சிலர்கள் சொத்து வரி செலுத்துவது இப்போது தெரியவந்துள்ளது.
சொத்தின் பெயர் மாற்றம் செய்கிறார்களே தவிர, வரி கட்டண விகிதங்களை மாற்றிக் கொள்ளவில்லை. கவுன்சிலர்கள் சிலர், 1,419 ரூபாயும், 260 ரூபாயும், 528 ரூபாயும், 108 ரூபாய் என செலுத்துகின்றனர்.
இந்த வரிக்கான கட்டடங்களை ஆய்வு செய்தால், பல மடங்கு வரி கட்டணங்கள் மாறுபடும் என, கவுன்சிலர்கள் மீது புகார் எழுகிறது. பில் கலெக்டர்களும், கவுன்சிலர்கள் வீடுகளை ஆய்வு செய்ய தயங்குவதே இதற்கு காரணமாக அமைகிறது.
மாநகராட்சி கமிஷனர், இந்த விவகாரத்தில், 51 கவுன்சிலர்களின் வீடுகளின் கட்டட பயன்பாடு எத்தனை சதுரடி உள்ளது என, கணக்கிட்டு, சரியான வரி விகிதங்களை நிர்ணயிப்பாரா என, நகரவாசிகள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.