/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நகைக்கடையில் 55 பவுன் திருட்டு
/
நகைக்கடையில் 55 பவுன் திருட்டு
ADDED : மார் 18, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் மீனாட்சி கார்டனை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 45. அஞ்சுகிராமம் சோதனை சாவடி அருகே நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்தார். நேற்று காலை கடை ஷட்டர் உடைக்கப்பட்டு 55 பவுன், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போயிருந்தது.
தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சிறிது துாரம் ஓடி நின்று விட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.