/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் கொட்டியது மழை கால்வாயில் கவிழ்ந்தது கார்
/
குமரியில் கொட்டியது மழை கால்வாயில் கவிழ்ந்தது கார்
குமரியில் கொட்டியது மழை கால்வாயில் கவிழ்ந்தது கார்
குமரியில் கொட்டியது மழை கால்வாயில் கவிழ்ந்தது கார்
ADDED : ஜூன் 27, 2025 02:56 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை 3:00 மணி நேரம் விடாது பெய்து மழையால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் கால்வாயில் கார் கவிழ்ந்து மூழ்கியது.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலை மழை வலுத்தது. 9:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை மதியம் 12:30 மணி வரை வெளுத்து வாங்கியது. நாகர்கோவில் நகரில் பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, கோட்டாறு உள்ளிட்ட பகுதி ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுசீந்திரம், அஞ்சு கிராமம், மயிலாடி, கொட்டாரம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை காரணமாக காளிகேசம், கீரிப்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 44.21 அடியாக இருந்தது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.45 அடியாக உள்ளது.
நேற்று மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் சிரமப் பட்டனர். வடிவீஸ்வரம் பறக்கின்கால் பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு நான்கு பேர் குடும்பத்தினர் காரில் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கால்வாய் அடையாளம் தெரியாமல் இடது பக்கம் திருப்பியதில் கார் கால்வாயில் கவிழ்ந்து மூழ்கியது. நான்கு பேரும் உடனடியாக கதவை திறந்து கரையேறி உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் காரை மீட்டனர்.