/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடியது குமரி
/
சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடியது குமரி
ADDED : மார் 28, 2025 02:31 AM
நாகர்கோவில்:சுட்டெரிக்கும் வெயில் மற்றும் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் காரணமாக சுற்றுலா மையமான கன்னியாகுமரி வெறிச்சோடியது. படகு போக்குவரத்து எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடக்க உள்ளன. இதனால் சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் வர தயங்குகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் கன்னியாகுமரி இதன் காரணமாக காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் மிகவும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன்பின்னர் குறைந்த அளவிலான பயணிகள் வெளியில் நடமாடுகின்றனர்.
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தொடர்ச்சியாக படகுகள் இயக்கப்படும். ஆனால் சில நாட்களாக பயணிகள் வருகைக்கேற்ப குறைவான எண்ணிக்கையிலே படகுகள் இயக்கப்படுகிறது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.