/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொங்கு இளைஞர் பேரவைநிர்வாகி மீது வழக்கு
/
கொங்கு இளைஞர் பேரவைநிர்வாகி மீது வழக்கு
ADDED : மார் 21, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கு இளைஞர் பேரவைநிர்வாகி மீது வழக்கு
கரூர்:அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த, கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. பேனர்கள் வைக்க உரிய அனுமதி பெறவில்லை என, போலீஸ் எஸ்.எஸ்.ஐ., முத்துசாமி புகார் அளித்தார். அதன்படி கரூர் டவுன் போலீசார், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கரூர் மாநகர செயலாளர் ராஜா, 45, மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

