/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சப்-கலெக்டர் தலைமையில்அனைத்து கட்சி கூட்டம்
/
சப்-கலெக்டர் தலைமையில்அனைத்து கட்சி கூட்டம்
ADDED : மார் 26, 2025 01:57 AM
சப்-கலெக்டர் தலைமையில்அனைத்து கட்சி கூட்டம்
குளித்தலை:குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் இந்துமதி முன்னிலை வகித்தனர். குளித்தலை கோட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்படும் இடங்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்., -தி.மு.க.,- அ.தி.மு.க.,- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.