/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 25, 2025 01:06 AM
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்:நாமக்கல் - மோக னுார் சாலை, பழைய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று தேசிய காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மேலும், காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய, ஐந்து மருத்துவ பணியாளர்கள், அதிக காசநோயாளிகளை கண்டறிய உதவிய மருத்துவமனைகள் மற்றும் 20 காசநோயாளிகளுக்கு, எட்டு மாதம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பேரணி, மோகனுார் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று, மீண்டும் பழைய மருத்துவமனையை வந்தடைந்தது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் மருத்துவ பணிகள் ராஜ்மோகன், துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.