/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே வாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 10 பேர் கைது
/
கரூர் அருகே வாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 10 பேர் கைது
கரூர் அருகே வாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 10 பேர் கைது
கரூர் அருகே வாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 10 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2025 01:47 AM
கரூர், கரூர் அருகே, கத்தியுடன் சுற்றி கொண்டிருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய இரண்டு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கோவை சாலை திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மூன்று கத்திகளுடன் சுற்றி கொண்டிருந்த கரூரை சேர்ந்த தினேஷ் குமார், 25; சந்துரு, 23; சுரேஷ், 22; ஆகாஷ், 21; ஜினித், 19 மற்றும் 17 வயது சிறுவன் என ஆறு பேரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அஜித், ஹரி ஆகிய இரண்டு பேரை கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
* கரூர் அருகே, வாள்களுடன் உலா வந்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் அருகே சின்ன ஆண்டாங்கோவில் மேட்டு தெரு பகுதியில், சிலர் மூன்று வாள்களை வைத்து கொண்டு, பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, வாள்களை வைத்து கொண்டு, பொதுமக்களை பயமுறுத்தி வந்ததாக சூரிய பிரகாஷ், 19; கோகுலகண்ணன், 22; கவுதம், 23 மற்றும் 15 வயது சிறுவன் என நான்கு பேரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். மூன்று வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.