/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாலிபருக்கு பீர் பாட்டில் அடி: 4 பேர் கைது
/
வாலிபருக்கு பீர் பாட்டில் அடி: 4 பேர் கைது
ADDED : ஜூன் 15, 2025 01:53 AM
கரூர், வாங்கல் அருகே, வாலிபரை பீர் பாட்டிலால் அடித்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வையாபுரி நகர் ஜி.பி., நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன், 20; இவருக்கும், கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்த சஞ்சய், 23; என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த, 12 மாலை சரவணன், நண்பர்களுடன் வாங்கல் ரயில்வே பாலம் பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது, அங்கு சென்ற சஞ்சய், அவரது நண்பர்கள் முகமது அன்சாரி, 22, கமலேஷ், 22 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், சரவணனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், பீர் பாட்டிலால் சரவணனை, சஞ்சய் அடித்துள்ளார். அதில், தோள்பட்டையில் படுகாயம் அடைந்த சரவணன், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சரவணன் அளித்த புகார்படி சஞ்சய், முகமது அன்சாரி, கவுசிக், கமலேஷ் உள்பட, நான்கு பேரை வாங்கல் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.