/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாகனத்தை வழி மறித்து தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
/
வாகனத்தை வழி மறித்து தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
வாகனத்தை வழி மறித்து தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
வாகனத்தை வழி மறித்து தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜன 19, 2024 11:56 AM
குளித்தலை: திண்டுக்கல் மாவட்டம், செட்டி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஞானஜோதி, 44. இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.
கடந்த, 15 மாலை, 6:40 மணியளவில் தன் மனைவி அன்னகாமாட்சி, மைத்துனர் மனைவி ஆகியோருடன் கொசூரில் உள்ள குலதெய்வ கோவிலில் சுவாமியை கும்பிட்டு விட்டு, மகேந்திரா டிராவல்ஸ் வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
தரகம்பட்டி நெடுஞ்சாலையில் சேர்வைக்காரன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத நான்கு பேர் வாகனத்தை வழிமறித்து, தகாத வார்த்தையால் பேசி, கரும்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து ஞானஜோதி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் சீகம்பட்டியை சேர்ந்த பிரகாஷ், தங்கவேல், வெற்றிச்செல்வன், கருப்பசாமி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.