/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
4 ஆண்டில் 1.90 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,661.22 கோடி விவசாய கடன் வழங்கல்

ADDED : ஜூன் 25, 2025 01:41 AM
கரூர், கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், நான்கு ஆண்டில், 1.90 லட்சம் விவசாயிகளுக்கு 1,661.22 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், குறுகிய கால பயிர்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள், 85 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளில் அரசு நிர்ணயித்த இலக்கான, 1,099 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து, 34,957 விவசாயிகளுக்கு, 1,138.36 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனை விவசாயிகள் உரிய தவணை தேதியில் திருப்பி செலுத்தும்பட்சத்தில், வட்டி செலுத்த தேவையில்லை.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவை வளர்க்க, கே.சி.சி., திட்டத்தின் கீழ், 55,518 விவசாயிகளுக்கு, 522.86 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு ஆண்டுகளில் மொத்தம், ஒரு லட்சத்து, 90,475 விவசாயிகளுக்கு, 1,661.22 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.