/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு கல்லுாரியில் கலை திருவிழா கோலாகலம்
/
குளித்தலை அரசு கல்லுாரியில் கலை திருவிழா கோலாகலம்
ADDED : செப் 26, 2025 01:49 AM
குளித்தலை, குளித்தலை,
அரசு கலை கல்லுாரியில் உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி,
கல்லுாரி கலை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல்வர் சுஜாதா
விழாவை தொடங்கி வைத்தார். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி
தமிழ்த்துறை தலைவர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி கலை
திருவிழா ஒருங்கிணைப்பாளர் தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன்
ஒருங்கிணைப்பு செய்தார். பேராசிரியர் வைரமூர்த்தி வரவேற்றார்.
மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, கணிதத்துறை தலைவர் உமாதேவி
ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். துறை
தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள்
கலந்து கொண்டனர்.