ADDED : செப் 11, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை குளித்தலை அடுத்த நச்சலுார், மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கவேலு, 70; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புரசம்பட்டியை சேர்ந்த முருகேசன், 56, என்பவர், அந்த நிலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார்.
இதையறிந்த தங்கவேலு, கடந்த, 6 மதியம், 1:30 மணிக்கு, 'தனக்கு சொந்தமான நிலத்தில், எப்படி நீங்கள் வேலை செய்யலாம்' என, கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகேசன் ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து தங்கவேலு அளித்த புகார்படி, முருகேசன் மீது நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.