/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக ஏட்டு, இளம்பெண் மீது வழக்கு
/
தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக ஏட்டு, இளம்பெண் மீது வழக்கு
தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக ஏட்டு, இளம்பெண் மீது வழக்கு
தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக ஏட்டு, இளம்பெண் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 02:38 AM
குளித்தலை :குளித்தலை அருகே, தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக போலீஸ் ஏட்டு மற்றும் இளம் பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை கருங்கலாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ், 37; தி.மு.க., பிரமுகர். இவர், நாமக்கல் பகுதியை சேர்ந்த, 30 வயது பெண்ணுடன் கடந்த, 22ம் தேதி இரவு குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள, விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இளம் பெண் மற்றும் அறையில் தி.மு.க., பிரமுகர் சதீஷ் வைத்திருந்த, 27 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதற்கிடையில் அப்பெண், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வரும் பிரசாந்த், 35, என்பவருடன் குளித்தலை காவிரியாற்று பாலத்தில் டூவீலரில் சென்றுள்ளார்.
அதை பார்த்த சதீஷ், டூவீலரை நிறுத்தி பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது, உடன் சென்ற போலீஸ் ஏட்டு பிரசாந்துக்கும், சதீஷூக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த குளித்தலை போலீசார், மூன்று பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சதீஷூம், போலீஸ் ஏட்டு பிரசாந்த்தும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ் அளித்த புகார்படி குளித்தலை போலீசார், இளம்பெண் மற்றும் போலீஸ் ஏட்டு பிரசாந்த் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.