/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி
ADDED : மே 10, 2025 12:59 AM
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பாப்பகாப்பட்டி, வேப்பங்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மரவள்ளி கிழங்கு குச்சி நடவு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், மரவள்ளி செடிகள் பசுமையாக வளர்ந்து வருகின்றன.
மேலும் குறைந்த தண்ணீர் கொண்டு சாகுபடி செய்து வருவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் கிழங்கு சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், அதிகளவு கிழங்குகள் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். இப்பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி நடந்து வருகிறது.