/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி, அமராவதி ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை
/
காவிரி, அமராவதி ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை
ADDED : மே 16, 2025 01:38 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், மாயனுார், வாங்கல், குளித்தலை கடம்பர் கோவில், பசுபதிபாளையம், ஐந்து ரோடு ஆகிய காவிரி, அமராவதி ஆற்று பகுதிகளில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய, மீட்புப்பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் நடந்த ஒத்திகைக்கு, டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். அமராவதி, காவிரி ஆற்றில் அதிகளவு நீர் திறக்கும்போது, ஏற்படும் பேரிடர் குறித்தும், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒத்திகை நிகழ்வு நேரடியாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் தண்ணீரில் மூழ்கும்போது, எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம், எத்தனை வழிமுறைகளில் தங்களை எளிய முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம். மீட்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு எடுத்து செல்லுதல் குறித்து செயல் விளக்கம் காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) ஊரகவளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

