/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
/
சாலையில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜன 19, 2024 11:59 AM
கரூர்,: சாலையோரத்தில் குவியும் குப்பையை எரிப்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காந்திகிராமம் அருகில் போக்குவரத்து நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை அனைத்தும் சாலைகளில் கொட்டப்படுவதால் அவை துர்நாற்றம் வீசுகின்றன. அப்பகுதியில் சேரும் குப்பைஅப்புறப்படுத்தாமல், சாலையோரத்தில் எரிக்கின்றனர். குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் சாலையில் எதிரே வரும் நபர் கூட தெரியாத வகையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. மேலும் இந்த புகையை சுவாசிக்கும் அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் சுவாச கோளாறுகளால் தவிக்கின்றனர். இதனால் சாலையில் குப்பை போட்டு எரிப்பதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

