/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விபத்து காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
/
விபத்து காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:42 AM
கரூர், 'விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் இணைய வேண்டும்' என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து, பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, விபத்து காப்பீடு திட்டத்தின் பதிவு முகாம் கடந்த, 18ல் துவங்கியது. வரும், 30 வரை நடக்கிறது. இந்த திட்டத்தில், 18 வயது முதல், 65 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். இந்த திட்டத்துக்கு ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரர்களின் விபரங்களை கொண்டு வர வேண்டும்.
ஆண்டுக்கு, 320 ரூபாய்க்கு, ஐந்து லட்ச ரூபாய், 599 ரூபாய்க்கு, 10 லட்ச ரூபாய், 799 ரூபாய்க்கு, 15 லட்ச ரூபாய் என இந்த காப்பீடு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் சேர, கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தபால் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தபால்காரர்கள் மூலமாகவும், காப்பீடு திட்டத்தில் சேரலாம். எனவே, கரூர் மாவட்ட பொதுமக்கள் இந்த, விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.