/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.11 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

ADDED : ஜூன் 24, 2025 01:01 AM
கரூர், தமிழக முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக, இளம் பெண்ணிடம் பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ஆத்துார் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி கவிதா, 33; பி.காம்., வரை படித்துள்ளார்.
இவர் கடந்தாண்டு, கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த ராஜேந்திரன், 47; என்பவர், கவிதாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பிறகு, சென்னையில் தமிழக முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்தவதாக ராஜேந்திரன், கவிதாவிடம் கூறியுள்ளார். மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கவிதாவிடம் இருந்து, பல்வேறு தவணைகளில், 11 லட்ச ரூபாயை ராஜேந்திரன் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ராஜேந்திரன், அரசு வேலையை வாங்கி தரவில்லை. கவிதாவுக்கு பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து, கவிதா போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து ராஜேந்திரனை, வாங்கல் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.